பலாலி மண்ணின் உறவுப்பாலம்

gallery/panaiii

Über uns

எமது பலாலி கிராமமானது, வடக்கு திசையில் பாக்குநீரினையும் அதைத்தொடர்ந்து பரந்த கடல் பரப்பான வங்காளவிரிகுடாவும், கிழக்கு திசையில் வளலாய், பத்தைமேனி, அச்சுவேலியும், தென் திசையில் ஒட்டகபுலம், வயாவிளான், குரும்பசிட்டியும் மேற்கு திசையில் கட்டுவன், மயிலிட்டி என்னும் கிராமங்கள் பாதுகாப்பாக அமைய அவற்றின் மத்தியில் கடல் வளமும் நில வளமும் கொண்ட தமிழர்களின் பொருளாதார மையமாகும். வடக்கில் கரைமணலும் அதணைத்தொடர்ந்து கிராய்மண்ணும் தென்பகுதி முழுவதும் செம்மண் கனிவளத்துடன் தென்னந்தோப்புகளும் பனையடைப்புகளும் விவசாய நிலங்களும் மேயச்சல் நிலப்பரப்புகளும் மீன்பிடி வளங்களும் நிறைந்த அழகுமிகு கிராமம்.

 

பனைவளம்

பலாலி பனைகள் நிறைந்த ஊராகும்.பனந்தோப்பாகவும், ௬ட்டம் ௬ட்டமாகவும் நின்று அழகு சேர்த்தது.பனையில் இருந்து எதை பெற முடியுமோ அவை எல்லாவற் றையும் பெற்று கொண்டார்கள் .குறிப்பாக பனம்கள்,கருப்பணி,பனை ஓலை நுங்கு பனங்கிழங்கு பனம்பழம் போனறன .